Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளில்..." - தவெக தலைவர் விஜய் பதிவு!

11:13 AM Apr 14, 2024 IST | Web Editor
Advertisement

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று (ஏப். 14) கொண்டாடப்படுவதையொட்டி, நடிகர் விஜய் அம்பேத்கரை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார்.

Advertisement

அண்ணல் அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் பிறந்தார். 1919 இல் பொதுவாழ்க்கையைத் தொடங்கி அவர் 37 ஆண்டுகள் படிப்பது, எழுதுவது, போராடுவது என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டே இருந்தார். ஏப்ரல் 14 அன்று உலகம் முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் அண்ணலின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

கிராமங்களில் அண்ணல் அம்பேத்கரின் தத்துவங்களையும், கொள்கைகளையும், கோட்பாடுகளையும் எடுத்துக்கூறி இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும், விளையாட்டுப் போட்டிகள் வைத்தும் திருவிழா போன்று கொண்டாடி மகிழ்வார்கள். இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நடிகர் விஜய் அம்பேத்கரை நினைவு கூர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில், அவர் வலியுறுத்திய சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை, எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்” என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.

Tags :
AmbedkarAmbedkar JayantiNews7Tamilnews7TamilUpdatesthalapathy vijaytvk
Advertisement
Next Article