Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இன்னுயிரை நீத்த தீரமிகு காவலர்கள் அனைவருக்கும் அதிமுக சார்பில் எனது வீரவணக்கம்" - எடப்பாடி பழனிசாமி!

அமைதியான நாட்டை உருவாக்க தாங்கள் செய்த தியாகம், தலைமுறைகள் தாண்டி நினைவுகூரத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
01:35 PM Oct 21, 2025 IST | Web Editor
அமைதியான நாட்டை உருவாக்க தாங்கள் செய்த தியாகம், தலைமுறைகள் தாண்டி நினைவுகூரத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement

1959ஆம் ஆண்டு அக்.21இல் லடாக் பகுதியில் சீன ராணுவத் தாக்குதலில் மத்திய படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவலர்களின் நினைவாக அக்.21 ம் தேதி வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "காவலர் வீரவணக்க நாளான இன்று, மக்கள் உயிர் காக்க தங்கள் இன்னுயிரை நீத்த தீரமிகு காவலர்கள் அனைவருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது வீரவணக்கம்!

அமைதியான நாட்டை உருவாக்க தாங்கள் செய்த தியாகம், தலைமுறைகள் தாண்டி நினைவுகூரத்தக்கது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AIADMKedappadi palaniswamipolicemenPoliceValorDayTamilNadu
Advertisement
Next Article