Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அம்பேத்கரின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்" - எடப்பாடி பழனிசாமி!

சமத்துவத்தை சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த வேண்டும் என அயராது பாடுபட்ட சிந்தனையாளர் அம்பேத்கர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10:58 AM Dec 06, 2025 IST | Web Editor
சமத்துவத்தை சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த வேண்டும் என அயராது பாடுபட்ட சிந்தனையாளர் அம்பேத்கர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அந்த பதிவில், "சமத்துவத்தை சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த வேண்டும் என அயராது பாடுபட்ட சிந்தனையாளர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் சமரசமின்றி, தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடிய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ADMKAmbedkaranniversaryedappadi palaniswamitribute
Advertisement
Next Article