For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வரி செலுத்தாமல் இயக்கப்படும் #OmniBuses சிறைப்பிடிக்கப்படும் - போக்குவரத்துத் துறை எச்சரிக்கை!

10:15 AM Oct 29, 2024 IST | Web Editor
வரி செலுத்தாமல் இயக்கப்படும்  omnibuses சிறைப்பிடிக்கப்படும்   போக்குவரத்துத் துறை எச்சரிக்கை
Advertisement

சோதனையின் போது, ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் அவை சிறைபிடிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தீபாவளி வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அதிக கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என உரிமையாளர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பயணச்சீட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு செயலிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. எனினும், அதிக கட்டணம் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும், வெளிமாநில பேருந்துகள் தமிழ்நாடு அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயக்குவதும் தெரிய வந்துள்ளது. போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் பேருந்து நிலையங்களிலும், வழித்தடத்திலும் மேற்கொள்ளப்படும் சோதனையின் போது, வரி செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்தை சிறைபிடிக்க நேரிடும்.

எனவே, பயணிகள் தாங்கள் பயணிக்கவிருக்கும் பேருந்தின் உரிமம், வரி, தகுதிச்சான்று போன்றவை சரியாக இருக்கிா என நிர்வாக தரப்பினரிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, சில பேருந்துகளில் இறுதியாக சென்று சேருமிடத்துக்கான கட்டணத்தையே, வழியிலுள்ள அனைத்து ஊர்களுக்கும் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எடுத்துக்காட்டாக சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரூ.1,400 நிர்ணயித்திருந்தால், அந்த பேருந்தில் மதுரைக்கு செல்ல ரூ.1000 என்றளவில் வழக்கமாக வசூலிப்பார்கள். மாறாக, ரூ.1,400 வசூலிக்கப்படுகிறது.

மேலும், சில பேருந்துகளில் வழியில் உள்ள ஊர்களுக்கே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
Advertisement