For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை நீட்டிக்க வேண்டும்" - ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை!

04:46 PM Jun 17, 2024 IST | Web Editor
 வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை நீட்டிக்க வேண்டும்    ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை
Advertisement

வெளிமாநிலப் பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு மேலும் 3 மாதம் உரிமத்தை நீட்டிக்குமாறு, போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்க ஆம்னி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், வெளிமாநில பதிவு எண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் அடங்கும். வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.

அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்கக் கூடாது என கடந்த 12-ம் தேதி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கால அவகாசம் வேண்டி கோரிக்கை வைத்தனர். அதன்படி, தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் இயங்க இன்று வரை கால அவகாசம் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான காலக்கெடு நாளை (ஜூன் 18) காலையுடன் முடிவடைகிறது. வெளி மாநில பதிவெண்ணுடன் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் நாளை இரவு முதல் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : “விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடுவது Waste of Time.. Waste of Money..” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

இதனால், போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து ஆணையரை நாளை பிற்பகல் சந்திக்க ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான பர்மிட்டை மேலும் 3 மாதம் நீட்டிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்க ஆம்னி உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.  தமிழ்நாடு பதிவெண்ணுக்கு மாறும் வகையில் 3 மாதம் பர்மிட்டை நீட்டித்துத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைக்க ஆம்னி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags :
Advertisement