For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்” - உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

12:00 PM Jan 21, 2024 IST | Web Editor
“கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்”   உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் வரை ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,  வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’  என்று பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து விரைவு போக்குவரத்து கழகத்தின் விரைவு, சொகுசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. தற்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் வகையில் கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் கடுமையாக நெருக்கடிகளையும், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சந்தித்து வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லவும் போதிய வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி அடைகின்றனர். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுகையில், தற்போது பேருந்து நிறுத்த மட்டும் அனுமதி கொடுத்த நிலையில் வேறு எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. வெளியூரிலிருந்து சுமார் 1,000 பேருந்துகள் வரும் நிலையில் 100 பேருந்துகளுக்கு மட்டும் தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னையின் பல்வேறு இடங்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. பணிகள் அனைத்தும் முடிந்து ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்ற வசதி ஏற்படுத்திதந்தால் பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றுவோம். எனவே கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் வரும் வரை இதே நிலை தான் நீடிக்கும். ஏனென்றால், ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆம்னி பேருந்துகளை ஜனவரி 24ம் தேதியே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மாற்ற வேண்டும் என்பது முடியாத காரியம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதுமான இடவசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித்தர வேண்டும். அதன் பின்னரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு ஆம்னி பேருந்துகளின் முழுமையான செயல்பாட்டை மாற்றுவோம்" என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement