ஆந்திராவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - 15 பேர் உயிரிழப்பு!
ஆந்திராவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
10:36 AM Dec 12, 2025 IST | Web Editor
Advertisement
ஆந்திரப் பிரதேச மாநிலம் மாரடி மல்லி பகுதியில் 37 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சீதாராம ராஜூ மாவட்டம் மாரெடுமில்லுவில் உள்ள கோவிலுக்கு இன்று அதிகாலை சென்ற போது ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Advertisement
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.