For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

5,009 உருமாற்றங்களை அடைந்த ஒமைக்ரான்!

10:57 AM Feb 09, 2024 IST | Web Editor
5 009 உருமாற்றங்களை அடைந்த ஒமைக்ரான்
Advertisement

கொரோனா 3-ம் அலையின் போது பரவிய,  'ஒமைக்ரான்' வைரஸ் 5,009 வகையில் உருமாற்றங்கள் அடைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

Advertisement

கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை, கொரோனா மூன்றாம் அலையின் போது பரவிய, ஒமைக்ரான் பி 1.1 மற்றும் அதன் உருமாற்றங்கள் குறித்த மரபணு ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகள் குறித்த முடிவுகளும், ஆராய்ச்சி கட்டுரையும் , 'ஜர்னல் ஆப் மெடிக்கல் வைராலஜி' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது;

ஆய்வில் மொத்தம் 11,526 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 10,663 மாதிரிகள் ஒமைக்ரான் வகையை சார்ந்தவை. உருமாற்றமடைய சாத்தியம் இருந்த, 1,688 மாதிரிகள் மரபணு சோதனைக்கும், 150 மாதிரிகள் ஆழ்ந்த சோதனைக்கும் உட்படுத்தப்பட்டன. ஒமைக்ரானின் உட்பிரிவான பி.ஏ.1 மற்றும் பி.ஏ.2.75 வகைகள், மக்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்த காரணமாக அமைந்தன. அதேபோல், பி.ஏ.1 - பி.ஏ.2 வகை பாதிப்புகள், உயிரிழப்புக்கு வழிவகுத்தன. அதை தொடர்ந்து, கொரோனா வைரஸின் வெளிப்புறத்தில் ஏற்பட்ட உருமாற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆழ்ந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட, 150 சளி மாதிரிகளில், 5,009 உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement