For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீபாவளியை முன்னிட்டு ஓமலுாரில் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பு!

10:13 AM Nov 06, 2023 IST | Student Reporter
தீபாவளியை முன்னிட்டு ஓமலுாரில் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பு
Advertisement
ஓமலுார் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்லம் உற்பத்தி அதிகரித்து வருகிறது.

சேலம் மாவட்டம்,  ஓமலுார் சுற்றுவட்டார பகுதிகளான திண்ணப்பட்டி,  தீவட்டிப்பட்டி,  காமலாபுரம் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து வெல்லம் உற்பத்தி ஆலைகளில் தினமும் 50 டன் முதல் 60 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement

செவ்வாய்ப்பேட்டை,  மூலப்பள்ளையார் கோயில் அருகே ஏலம் நடைபெறும் அதிலிருந்து வியாபாரிகள் வெல்லத்தை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இதற்கு அதிகமாக வெல்லம் பயன்படுத்தப்படுவதால் இந்த ஒரு வாரத்தில் மட்டும் 200 முதல் 300 டன் அளவுக்கு வெல்லம் விற்பனை நடைபெறுகிறது.

30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் தரத்தை பொறுத்து ரூ.1250 முதல் ரூ.1350 வரை விற்பனை செய்யப்படுகிறது.  இதனால் உற்பத்தியாளர்கள் இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர்.

அனகா காளமேகன்

Tags :
Advertisement