Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒலிம்பிக் - வில்வித்தையில் காலிறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேற்றம்!

04:12 PM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் இந்திய அணி காலிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

Advertisement

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது.ஒலிம்பிக் திருவிழா அதிகாரபூர்வமாக தொடங்கும் முன்பே சில போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் வில்வித்தை தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் பாரீஸ் நகரில் உள்ள இன்வாலிடெகார்ட்னில் மகளிர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய அணியில் அங்கிதா பகத், பஜன் கவுர் தீபிகா குமாரி ஆகியோர் இடம் பெற்றனர்.

12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி 1983 புள்ளிகளைப் பெற்றது. இதனால் 4வது இடத்தை பிடித்த இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. தென் கொரியா அணி 2046 புள்ளிகளுடன் முதலிடத்தையும் , சீனா 1996 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் , மெக்சிகோ 1986 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றன.

Tags :
archeryindian teamMukesh ambaninews7 tamilNews7 Tamil Updatesnita ambaniParis 2024paris 2024 olympicsParis Olympics
Advertisement
Next Article