For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விண்வெளியில் ஒலிம்பிக்ஸ் - நாசா வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்!

07:13 AM Jul 29, 2024 IST | Web Editor
விண்வெளியில் ஒலிம்பிக்ஸ்   நாசா வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்
Advertisement

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

Advertisement

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த 52 நாட்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) சிக்கியுள்ளார். விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவர்கள் பூமிக்கு திரும்பும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில், சுனிதாவின் தனித்துவமான வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது, அதில் அவர் பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்கத்தில் வீரர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த வீடியோவில், சுனிதாவும் மற்ற விண்வெளி வீரர்களும் ஒலிம்பிக் தீபத்தை பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த ஜோதி மின்விலக்குகளால் ஆனது.

வீடியோவில், அனைத்து விண்வெளி வீரர்களும் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். சுனிதா வில்லியம்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்கிறார், மற்ற விண்வெளி வீரர்கள் பளு தூக்குதல், பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல் போன்ற விளையாட்டுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

விண்வெளி வீரர்கள் கூறுகையில், "கடந்த சில நாட்களாக நாங்கள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களைப் போல் விளையாடி மகிழ்ந்தோம். இருப்பினும், இங்கு ஈர்ப்பு விசையின் சாதகம் இருந்தது. ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு அது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியும். அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்."  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.

Tags :
Advertisement