For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் உறுதி!

06:51 AM Aug 07, 2024 IST | Web Editor
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் உறுதி
Advertisement

ஒலிம்பிக் மல்யுத்த வரலாற்றிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் வினேஷ் போகத். 

Advertisement

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 60ஆவது இடத்தில் உள்ளது. எனினும், தங்கமோ, வெள்ளியோ கைப்பற்றவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கு வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார். ஜப்பான் வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினாலும், தொடர்ந்து போராடிய வினேஷ் போகத் 16-ஆவது சுற்றில் ஜப்பான் வீராங்கனையை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதன்மூலம் யு சுசாகியை தோற்கடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். தொடர்ந்து இதே எடைப்பிரிவில் காலிறுதி போட்டியில் உக்ரைனை சேர்ந்த ஒக்ஸானா லிவாச் என்பவரை எதிர்கொண்டார். இதில் 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு மகளிர் மல்யுத்தத்தில் பதக்கம் உறுதியாகி உள்ளது.

Tags :
Advertisement