Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,500 கன அடியாக அதிகரிப்பு!

09:56 AM Jul 03, 2024 IST | Web Editor
Advertisement

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Advertisement

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 3500 கனாடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை ஒகேனக்கலுக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 3500 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்!

கடந்த நான்கு மாதங்களாக கோடை வெப்பத்தால் நீர்வரத்து குறைந்து ஆங்காங்கு சிறு சிறு தண்ணீர் தேங்கி குட்டைகளாக காட்சியளித்த நிலையில், கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் தமிழ்நாடு – கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Tags :
DharmapurihogenakkalKaveriRainWater
Advertisement
Next Article