அட இது நல்ல ஐடியாவே இருக்கே.. ஓட்டு வேண்டுமானால் இதை செய்யுங்கள்...அதிரடி காட்டிய #Samaspur மக்கள்!
ஹரியானாவில் ஓட்டு கேட்டு செல்லும் வேட்பாளர்களிடம், தங்கள் பகுதியில் வரும் தண்ணீரை பிடித்து கொடுத்து குடியுங்கள் என சமஸ்பூர் கிராம மக்கள் அதிரடி காட்டியிருக்கிறார்கள்.
பொதுவாகவே தேர்தல் நேரத்தில் மட்டுமே, அரசியல் கட்சி தலைவர்களின் கண்களில் மக்கள் தென்படுவார்கள். மற்றபடி அவர்கள் எங்கு? எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறார்கள்? எந்த சூழலில் வாழ்கின்றனர்? என்பது தெரியது. கேட்டால் மக்களின் பிரிதிநிதி என கூறுவார்கள். இந்நிலையில் ஹரியானாவில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹரியானாவில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் சர்க்கி தாத்தி தொகுதிக்கு உள்பட்ட சமஸ்பூர் கிராமத்திற்கு ஓட்டு கேட்டு செல்லும் வேட்பாளர்களுக்கு அக்கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியை தருகின்றனர். அது என்னவென்றால் அங்கு இருக்கும் குடிநீர் குழாய்களில் தண்ணீரை பிடித்து, இதை நீங்கள் குடியுங்கள். குடித்தால், நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கிறோம் எனக் கூறுகின்றனர்.
அப்படி என்ன அந்த தண்ணீரில் உள்ளது என நாம் நினைக்கலாம். அசுத்தம், துர்நாற்றம், தூசு கலந்த தண்ணீரே அக்கிராம மக்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்படுகிறது. இதை எந்த உயிரினமும் குடிக்காது. ஆனால் மக்கள் குடித்து வருகின்றனர். இந்த தண்ணீர் பிரச்னையை கையிடுலெடுத்த கிராம மக்கள், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிம் இதை குடித்தால் ஓட்டு போடுகிறோம் என கூறுகின்றனர். இங்கு மட்டும் இல்லை பல மாநிலங்களில் மக்களின் கோரிக்கைகள் எல்லாம் கோரிக்கையாகவே உள்ளது.