For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இரவு நேர லாரி ஓட்டுநர்களுக்கு இலவச டீ - விபத்துகளை தடுக்க ஒடிசா அரசு ஏற்பாடு!

12:28 PM Dec 23, 2023 IST | Web Editor
இரவு நேர லாரி ஓட்டுநர்களுக்கு இலவச டீ   விபத்துகளை தடுக்க ஒடிசா அரசு ஏற்பாடு
Advertisement

இரவு நேரங்களில் அதிகரிக்கும் விபத்துகளை தடுக்க லாரி ஓட்டுநர்களுக்கு இலவச டீ வழங்கும் திட்டத்தை ஒடிசா அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

ஒடிசா மாநிலத்தில் இரவு நேரங்களில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெறுவதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  தொடர்ச்சியாக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த நவீன் பட்நாயக் தலைமையிலான மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக ஒடிசா மாநிலத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதிய திட்டத்தை அந்த மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.  அதன்படி ஒடிசா மாநிலத்தில் நெடுஞ்சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக  கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளை இயக்கும் இரவு நேர டிரைவர்களுக்கு தேநீர் இலவசமாக வழங்கும் திட்டத்தை மாநில போக்குவரத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

நெடுஞ்சாலைகளில் லாரிகளால் ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில்,  கனரக வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர் வழங்க ஏற்பாடு செய்ய ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டுகுனி சாஹு அறிவித்துள்ளார்.

இரவு நேர டிரைவர்களுக்கு தேநீர் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் இத்திட்டம் ஜனவரி 7-ம் தேதி வரை செயல்படுத்தவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. டிரைவர்களுக்கு இலவச டீ வழங்க  அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும்   அறிவுறுத்தப்பட்டுள்ளது.  நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் டிரைவர்களிடையே தூக்கம் அல்லது சோர்வு அதிகரிக்கையில் ஏற்படுவதால் விபத்துகள் அதிகரிப்பதை தொடர்ந்து இலவசமாக டீ வழங்கப்பட உள்ளது.

கடந்த 2018 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் ஒடிசா மாநிலத்தில் மொத்தம் 54,790 விபத்துகள் பதிவாகியுள்ளன.  இவற்றில் 25,934 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 51,873 பேர் காயமடைந்துள்ளதாக ஒடிசா மாநில அரசு சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement