For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் - கோடீஸ்வர வேட்பாளர்கள் எத்தனை பேர் தெரியுமா?

02:49 PM May 19, 2024 IST | Web Editor
ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல்   கோடீஸ்வர வேட்பாளர்கள் எத்தனை பேர் தெரியுமா
Advertisement

ஒடிசாவில் மூன்றாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் மொத்தம் 126 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

Advertisement

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதியும் (நாளை), 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதையும் படியுங்கள் : “கோயிலை கட்டுவதுதான் காங்கிரஸின் வழக்கம், இடிப்பது அல்ல” – செல்வப் பெருந்தகை பேட்டி..!

இந்த நிலையில் ஒடிசாவில் மூன்றாம் கட்ட சட்டப் பேரவைத் தேர்தல் வருகிற மே மாதம் 25ம் தேதி நடைபெற உள்ளது. புவனேஸ்வர், கட்டாக், தேன்கனல், கியோஞ்சார், பூரி மற்றும் சம்பல்பூர் மக்களவைத் தொகுதிகளுடன், இந்தத் தொகுதிகளின் கீழ் உள்ள 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பிஜு ஜனதா தள வேட்பாளர் சனாதன் மஹாகுட் ரூ.227.67 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இவர் சம்புவா தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் ஒடிசா தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை ஒடிசாவில் 42 சட்டப்பேரவை இடங்களுக்கு போட்டியிடும் 383 வேட்பாளர்களில் 381 பேரின் சொத்து விவர பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்துள்ளன.
அதன்படி, மாநிலத்தில் மூன்றாவது கட்ட சட்டமன்றத் தேர்தலில் 126 வேட்பாளர்கள் (33 சதவீதம்) 'கோடீஸ்வரராக' உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

தேர்தல்களில் பணபலத்தின் பங்கு அதிகம் என்பது, அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் பணக்கார வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதன் மூலம் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. காசிபுராவில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும், சௌமியா ரஞ்சன் பட்நாயக்கின் குடும்பச் சொத்து ரூ.122.86 கோடி என்று தெரிய வந்துள்ளது. அவர் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார்.

ரூ.120.56 கோடிகளுடன் மூன்றாவது இடத்தை நாயகர்க் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரத்யுஷா ராஜேஸ்வரி சிங் பிடித்துள்ளார்.முக்கிய கட்சிகளில், பிஜு ஜனதா தளத்தின் 42 வேட்பாளர்களில் 36 பேர், காங்கிரஸைச் சேர்ந்த 29 பேர், பாஜகவைச் சேர்ந்த 28 பேர், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதன்மூலம், ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.47 கோடி ஆக உள்ளது.

இதையும் படியுங்கள் : இந்திய மெட்ரோ ரயில் என மேற்கு வங்க பாஜக பரப்பிய படங்கள் பொய் - உண்மை என்ன?

பரம்பாவில் போட்டியிடும் கைலாஷ் சந்திர நாயக் (ரூ. 1,000), பிரம்மகிரியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சுகந்தா கடாய் (ரூ. 2,000), புவனேஸ்வரில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கோபிநாத் நாயக் (ரூ. 2,000) ஆகியோர் குறைந்த சொத்துக்களைக் கொண்ட வேட்பாளர்களாக உள்ளனர். ஆய்வு செய்யப்பட்ட 381 வேட்பாளர்களில், 100 வேட்பாளர்கள் மீது குற்றவழக்குகள் உள்ளன.

முக்கியக் கட்சிகளில், 23 பாஜக வேட்பாளர்கள், ஒரு சிபிஐ(எம்) வேட்பாளர், 13 காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் 12 பிஜேடி வேட்பாளர்கள் தங்கள் பிரமாணப் பத்திரங்களில் தங்களுக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
155 வேட்பாளர்கள், 5 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இடைப்பட்டவர்களாகவும், 210 பேர் பட்டதாரிகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களாகவும் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதைத்தவிர, 12 வேட்பாளர்கள் டிப்ளமோ படித்தவர்களாகவும், 4 வேட்பாளர்கள் சராசரி கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement