Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இலங்கை அணி அறிவிப்பு!

09:56 PM Jul 30, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.  இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.  இதில் முதலாவது ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 வது மற்றும் கடைசி டி20 தொடர் பல்லகெலேவில் இன்று நடைபெற்று வருகிறது.  இதனை தொடர்ந்து இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்க உள்ளது.  இந்த நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம்:-

சரித் அசலங்கா(கேப்டன்), பதுன் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, காமிந்து மெண்டிஸ், ஜனித் லியாநகே, நிஷான் மதுஷ்கா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லகலே, சமிகா கருணாரத்னே, மகேஷ் தீக்ஷனா, அகிலா தனஞ்ஜெயா, தில்ஷான் மதுஷன்கா, மதீஷனா பதிரனா மற்றும் அசிதா பெர்னாண்டோ.

Tags :
IND vs SLIndiaSL vs INDSrilankaSrilankan TeamT20 match
Advertisement
Next Article