படுகர் இன மக்கள் திருவிழாவில் உற்சாகமாக நடனமாடிய ஓ.பன்னீர்செல்வம்!
கோத்தகிரியில் படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகமாக நடனமாடினார்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்களின் குல தெய்வ திருவிழாவான
ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக மாவட்டம்
நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: “சமூகம் மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தொடர்ந்து, ஹெத்தையம்மன் திருவிழாவில் கலந்து கொள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோத்தகிரி பகுதிக்கு வருகை புரிந்தார். படுகர் இன மக்களின் சார்பில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து படுகர் இன மக்களுடன் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் புகழேந்தி ஆகியோர் நடனமாடினர்.