NZvsPak 2வது டி20 - நியூஸிலாந்துக்கு 136 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
நியூஸிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முதலில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
தொடர்து 2வது டி20 போட்டி டுனெடினில் இன்று(மார்ச்.18) நடைபெறுகிறது. மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டதால் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பில் முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ், சல்மான் ஆகா (கேப்டன்), இர்பான் கான், ஷதாப் கான், அப்துல் சமத், குஷ்தில் ஷா, ஜஹந்தத் கான், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது அலி. ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
அதே போல் நியூஸிலாந்து அணி சார்பில் டிம் சீபர்ட், பின் ஆலன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் ஹே, மைக்கேல் பிரேஸ்வெல்(கேப்டன்), ஜகரி பவுல்க்ஸ், ஜேக்கப் டபி, இஷ் சோதி, பென் சியர்ஸ் ஆகியோர் விளையாடி வருகின்றனர். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை எடுத்து நியூசிலாந்து அணிக்கு 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா 46 ரன்களை எடுத்திருந்தார். நியூஸிலாந்து அணியில் ஜேக்கப் டபி, பென் சியர்ஸ் , ஜேம்ஸ் நீஷம், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.