காபி பொடி, பொம்மைகள் மூலம் தங்கம் கடத்தல் - திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம்...!
09:14 AM Feb 11, 2024 IST
|
Web Editor
மறைத்து வைத்து கடத்தி எடுத்து வரப்பட்ட ரூ. 17 லட்சத்து 39 ஆயிரத்து 460
மதிப்புள்ள 273.5 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பொம்மைகள், சூட்கேஸ், உடைமைகள் போன்ற பொருட்களில் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வரும் சம்பவம் தொடர்ந்து வருவது குறிப்பிடதக்கது.
Advertisement
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், காபி பவுடர் மற்றும் பொம்மைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த 17 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Advertisement
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உடைமைகளில் காபி மேட் பவுடர் மற்றும் குழந்தை விளையாட்டு பொம்மைகளில் 273.5 கிராம் தங்கத்தை நூதன முறையில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார்.

Next Article