Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து அசாம் செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றம்!

09:49 AM Jun 17, 2024 IST | Web Editor
Advertisement

கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து அசாம் செல்லும் விரைவு ரயில்களின் வண்டி எண்கள் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Advertisement

இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம்,  திப்ருகருக்கு விவேக் விரைவு ரயில் வாரம் 5 நாட்கள் இயக்கப்படுகிறது.   இந்த ரயிலின் வண்டி எண் மாற்றப்பட உள்ளது.  அதன்படி,  இந்த ரயிலின் வண்டி எண் ஜூலை 1ம் தேதி முதல் 22503 என்பதற்கு பதிலாக 15905 என மாற்றப்படும்.  மறுமாா்க்கமாக அசாம் மாநிலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் ரயிலின் எண் 22504 என்பதற்கு பதிலாக 15906 என மாற்றப்படும்.

அதேபோல், கோவையிலிருந்து அசாம் மாநிலம்,  சில்சா் செல்லும் வாராந்திர விரைவு ரயிலின் வண்டி எண் 12515 என்பதற்கு பதிலாக 15675 என மாற்றப்படும்.  மறுமாா்க்கமாக அசாம்  மாநிலத்திலிருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயிலின் எண் 12516 என்பதற்கு பதிலாக 15676 என மாற்றப்படும்." இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags :
assamCoimbatoreKanyakumariTrain
Advertisement
Next Article