Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அணு சக்தி விவகாரம் : அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது - ஈரான் தலைவர் காமேனி பரபரப்பு பேச்சு!

அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று ஈரான் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.
01:30 PM Aug 25, 2025 IST | Web Editor
அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று ஈரான் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.
Advertisement

கடந்த மாதம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாட்கள் கடுமையான மோதல் நிலவியது. அந்த மோதலில் இஸ்ரேல், ஈராநின் அணு விஞ்ஞானிகளையும், நூற்றுக்கணக்கான மக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் இஸ்ரேலில் கடும் சேதங்கள் ஏற்பட்டது.

Advertisement

அப்போது அமெரிக்காவும் நேரடியாக ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை தாக்கியது. இதன் தாக்கம் இன்னும் மதிப்பிடவில்லை என்றாலும் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஈரான் தலைவர் காமேனி கூறுகையில், "அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 நாள் தாக்குதலால் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர முடியாது. அணு சக்தித் திட்டம், தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எங்களுக்குள் பிரிவினையை விதைக்க முயற்சி செய்கின்றனர். கடவுலின் ஆசியால் மக்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
AmericaIranIranian LeaderKhamenei'sNuclear issuespeechTrump
Advertisement
Next Article