Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பம் - திமுக அறிவிப்பு!

03:15 PM Feb 15, 2024 IST | Web Editor
Advertisement

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வேட்பாளர்களுக்கான விண்ணப்ப தேதியை  திமுக அறிவித்துள்ளது. 

Advertisement

இது தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் 19 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.  போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விண்ணப்பக் கட்டணம் ரூ.50,000 எனவும்,  விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.2,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article