"நா...காட்டாற்று வெள்ளம்...என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது...." | #DonaldTrump!
எனது வேகத்தை எதுவும் குறைக்காது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார். அதேபோல், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிருகிறார். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும், அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், 2-வது முறையாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பிறகு டொனால்ட் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நான் இருந்த இடத்திற்கு அருகாமையில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதுதொடர்பான வதந்திகள் பரவுவதற்கு முன்னர் நான் உங்களுக்கு இதனைக் கூற விரும்புகிறேன். நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கின்றேன். எனது வேகத்தை எதுவும் குறைக்காது.”
இவ்வாறு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.