Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஆருத்ரா மோசடியை தீர விசாரித்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை மட்டுமல்லாமல் பல சம்பவங்களை தடுக்கலாம்!” - சசிகாந்த் செந்தில் எம்.பி

10:10 PM Jul 19, 2024 IST | Web Editor
Advertisement

ஆருத்ரா மோசடியை தீர விசாரித்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை மட்டுமல்லாமல் பல சம்பவங்களை தடுக்கப்படலாம் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார். 

Advertisement

இணைந்தெழு தமிழ்நாடு இயக்கத்தின் மாநில அளவிலான கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பி டி தியாகராய அரங்கத்தில் இன்று (19.07.2024) நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிகாந்த் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரை
நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த்
செந்தில் கூறியதாவது:

ஜனநாயக விரோத சக்திகளை எதிர்த்து அரசியல் கட்சிகள் மட்டுமல்ல மக்களும் மக்கள்
இயக்கங்களும் சேர்ந்து ஒரு போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே பாஜகவை நாம்
ஒடுக்க முடியும். அதற்கு இணைந்தெழு தமிழ்நாடு போன்ற பல இயக்கங்கள் உருவாக
வேண்டும்.

பாஜகவை பொருத்தவரை அமைச்சர்கள் என்று யாரும் கிடையாது ஒரே ஒரு தலைவர்
மட்டும்தான் உள்ளார். அமைச்சர்களுக்கு ஒரே வேலை தலைவரை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம் என்று தான் நினைப்பார்கள். எதை சொன்னால் தலைவர் சந்தோஷமாக இருப்பார்கள் என்று தான் நினைப்பார்கள். அது போன்று ஆட்களை அமைச்சர்களாக அமர வைத்ததை நினைத்து கவலை தான் பட வேண்டுமே தவிர மத்திய அமைச்சர்கள் பேசும் வார்த்தைகளை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் திமுக காவிரி நதிநீர் பிரச்சினையில்
சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருகிறார்கள் என பாஜக வானதி ஸ்ரீனிவாசன்
கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகாந்த் செந்தில், மாநிலங்களுக்கு மத்தியில் ஒரு தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டால் மாநிலங்களுக்கு
இடையேயான நதிநீர் பிரச்சனை சட்டம் மூலம் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம்
உருவாக்கி அதன் மூலம் தீர்வு காண வேண்டும். அரசாங்கங்கள் செய்ய வேண்டிய வேலைகளை அரசியல் கட்சிகள் செய்யவில்லை என வானதி சீனிவாசன் கூறுவது சரி கிடையாது பொறுப்பில்லாமல் கூறுவது போல் இருக்கிறது.

40 வருடம் பின்னோக்கி செல்லக்கூடிய அரசாங்கம் பாஜக அரசாங்கம். ஒவ்வொரு
சட்டங்களாக கொண்டு வருகிறார்கள். அந்த சட்டத்திற்கு ஒரு பெயர் வைக்கிறார்கள்
அது யாருக்கும் புரியவில்லை.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரும் தொந்தரவு ஏற்படுத்திக் கொள்ளாமல் அனைவரும் ஆருத்ரா சம்பவத்தை தான் கவனம் செலுத்த வேண்டும். பாஜகவின் மகளிர் அணி தலைவி அஞ்சலி என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பல பேர் இதில்
சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஆருத்ரா கொலைக்கு ஒரு சாவி போன்று இருந்திருக்கிறது. ஆருத்ரா மோசடியை தீர விசாரித்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை மட்டுமல்லாமல் பல சம்பவங்களை தடுக்கப்படலாம்.

தேடி தேடி ரவுடிகளை பிடித்து பாஜகவில் சேர்கிறார்கள். பட்டியல் விட வேண்டிய
நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆருத்ரா விஷயத்தை எடுத்த போது அண்ணாமலை கோபப்பட்டு பேசுகிறார். கொலை வழக்கை ஈடியிடம் கொடுக்க வேண்டும், சிபிஐயிடம் கொடுக்க வேண்டும் என்று பேசுவதெல்லாம் அதிலிருந்து தப்ப வேண்டும் என்று முயற்சியாக பார்க்கிறேன்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று சட்டங்களும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத
சட்டங்கள். அதற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். இதுவரை இருந்த சட்டங்கள்
பிரிட்டிஷ் முறை சட்டம் நாங்கள் இந்திய முறை சட்டத்தை கொண்டு வருகிறோம் என்று
கூறுகிறார்கள் இந்த இந்திய முறை சட்டத்தை கேள்விப்பட்டாலே பயமாக இருக்கிறது.
அதிலிருந்து ஓடி வந்து அரசியலமைப்புச் சட்டத்தை கையில் எடுத்தோம் மீண்டும்
இந்த இந்திய முறை சட்டத்திற்கு கொண்டு சொல்கிறோம் என்று கூறுவது
பயமாக இருக்கிறது. இவ்வாறு சசிகாந்த் செந்தில் எம்.பி கூறினார்.

Tags :
candidateCongressnews7 tamilNews7 Tamil UpdatesSasikanth SenthilThiruvallur Constituency
Advertisement
Next Article