Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திரையுலகில் டாப் 3 என்பதில் ஈடுபாடில்லை” - நடிகர் விக்ரம்!

02:14 PM Aug 12, 2024 IST | Web Editor
Advertisement

விஜய், அஜித், சூர்யா அளவிற்கு உங்களுக்கு ரசிகர்கள் இல்லை' என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் நடிகர் விக்ரம் பதிலளித்துள்ளார். 

Advertisement

நடிகர் விக்ரம் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
அதற்கான, புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புரோமோஷனில் ஒரு பகுதியாக நேற்று நடிகர் விக்ரம், நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் மதுரையில் ரசிகர்களைச் சந்தித்தனர்.

அப்போது, பத்திரிகையாளர் ஒருவர், ‘ஒவ்வொரு முறையும் சிறந்த நடிப்பைக் கொடுத்து அசர வைக்கிறீர்கள். ஆனால், விஜய், அஜித், சூர்யாவிற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உங்களுக்குக் குறைவாக இருப்பது ஏன்?’ என்று கேள்வி கேட்டார். இதைக் கேட்ட விக்ரம், “என் ரசிகர்கள் பட்டாளம் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. தங்கலான் படம் வெளியாகும்போது திரையரங்கில் வந்து பாருங்கள். எல்லா ரசிகர்களும் என் ரசிகர்கள்தான். நானும் தூள், சாமி போன்ற கமர்சியல் படங்களைக் கொடுத்தவன்தான். எனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.

ஆனால், சினிமாவின் தரத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நிறைய முயற்சிகள் செய்தேன். அந்த உழைப்பே தங்கலான் மற்றும் வீர தீர சூரனாக உருமாறியிருக்கிறது. முதல் மூன்று இடங்களில் எல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லை. அதுபற்றி எனக்குக் கவலையுமில்லை” எனக் கூறினார். இதைக்கேட்ட விக்ரம் ரசிகர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Tags :
film industrythangalaanTop3vikram
Advertisement
Next Article