For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர்கூட செல்லாது" - மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் உறுதி!

பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர்கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
08:00 AM Apr 26, 2025 IST | Web Editor
பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர்கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
 பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர்கூட செல்லாது    மத்திய அமைச்சர் சி ஆர் பாட்டீல் உறுதி
Advertisement

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்திய நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்குள் தண்ணீர் பாய்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேற்று உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

Advertisement

"இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர்கூட செல்லாத வகையில் 3 விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்நிலை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது, பாகிஸ்தானுக்குள் தண்ணீர் பாய்வதைத் தடுக்க விரைவில் இந்தியாவில் உள்ள நதிகளை தூர்வாரி, நீரை திசைதிருப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், 'சிந்து நதிநீர் ஒப்பந்தத்துக்கு மத்தியஸ்தம் செய்த உலக வங்கியிடம், அந்த ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதைத் தெரியப்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் வரும் நதிகளில் கட்டப்பட்ட அணைகளின் நீர் இருப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதிப் படுகையில் உள்ள 6 நதிகளின் நீர் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

Tags :
Advertisement