For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஒரு நாள் கூட ஓய்வு இல்லை... ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை..." - திருமாவளவன் எம்.பி. பேச்சு

ஒரு நாள் கூட ஓய்வு இல்லை... ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
01:48 PM Apr 20, 2025 IST | Web Editor
 ஒரு நாள் கூட ஓய்வு இல்லை    ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை       திருமாவளவன் எம் பி  பேச்சு
Advertisement

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று காலை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் இருந்து முகநூல் நேரலையில் உரையாற்றினார். அப்போது திருமாவளவன் எம்.பி. பேசியதாவது,

Advertisement

"ஒரு நாள் கூட எனக்கு ஓய்வு இல்லை, ஒரு மணி நேரம் கூட எனக்கு தனிமை இல்லை. கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் கலந்துகொள்ள வைப்பது மன அழுத்தத்தை தருகிறது. நாள் கணக்கில் மணிக்கணக்கில் கிடையாய் கிடந்து அழுத்தம் கொடுத்து என்னை இழுத்துச் செல்வதால் கட்சி பணிகளை என்னால் மேற்கொள்ள முடியவில்லை. மே மாதத்தில் தயவு கூர்ந்து நிகழ்ச்சிகளுக்கு அழைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

வரும் 22ம் தேதி முற்பகலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பிற்பகலில் மேலிட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்கிறோம். விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை உதிரிகளைக் கொண்டு பரப்புகிறார்கள்.

இந்த அவதூறுகளை கடந்து செல்கிறோம் என்றாலும் கூட தொண்டர்கள் அதில் ஒரு தெளிவு பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும், அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. எல்லா கதவுகளையும் திறந்து வைத்து ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதலான பேரம் பலிக்கிற இடத்திலே உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது என்பதெல்லாம் பெரிய ராஜதந்திரம் அல்ல. அது சுயநலம், சந்தர்ப்பவாத அரசியல்.

நாம் அதனை பொருட்படுத்தவில்லை. அதில் ஈடுபாடு காட்ட வில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். அதற்கு ஒரு தெளிவு, தொலைநோக்கு பார்வை வேண்டும். இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாதவர்கள் நமக்கு எதிராக தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

https://www.facebook.com/thirumaofficial/videos/1094183382738831

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிற அரசியல் கட்சிகள் போல் இல்லாமல் ஒரு முன்மாதிரி இயங்கக்கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது. தொடர்ந்து அதனை உறுதிப்படுத்துவோம். யார் என்ன சொன்னாலும் எதை சொன்னாலும் எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில் தொண்டர்கள் ஏதேனும் கருத்தை சொல்லி அதற்குள்ளே போய் சிக்கிக் கொள்ளக் கூடாது.

அரசியல் தொடர்பான விவாதங்களில் தலைமையின் முடிவை, போக்கை அறிந்து கருத்துக்களை சொல்ல வேண்டும். இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. ஒரு சில மாதங்களில் கூட்டணி தொடர்பான விவாதங்கள் தீவிரப்படும். அதில் அவர்களின் முதல் நிலைப்பாடு திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்துவது. அதில் தான் உறுதியாக இருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு இருக்கிற துருப்பு சீட்டு விசிக தான்"

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement