Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’தெலங்கானாவில் போட்டியிடவில்லை : காங்கிரசுக்கு ஆதரவு’ - ஒய்.எஸ்.சர்மிளா திடீர் பல்டி..!

06:57 PM Nov 03, 2023 IST | Web Editor
Advertisement

தெலங்கானாவில் போட்டியிடவில்லை எனவும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்.

Advertisement

தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சியிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆந்திராவின் முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா  ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் ஒய்.எஸ்.சர்மிளா தொடர்ச்சியாக பி.ஆர்.எஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் அடிப்படையில் ஆளும் கட்சியான பிஆர்எஸ் கட்சியின் சந்திர சேகர ராவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியுடன் இணைய பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார்.

பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் காங்கிரஸிடமிருந்து கூட்டணி குறித்து முறையான அழைப்பு வராத நிலையில் தனித்து தேர்தலை சந்திக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.  இது தொடர்பாக பேசிய அவர் தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் இருக்க காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செல்ல விரும்பினோம்.  ஏனெனில் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்தால் அது இறுதியில் முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்குத்தான் பலன் தரும்.  ஆனால் அது நடக்கவில்லை.  அதனால் தற்போது தனித்து களம் காண்கிறோம். இதனால எங்கள் மீது எந்த  தவறும் இல்லை” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தெலங்கானாவில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், காங்கிரஸுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
Tags :
BRSCongresskcrPoliticsTelanganaYS SharmilaYSR Party
Advertisement
Next Article