For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஒரு ஊரையே காணவில்லை...ஆற்றின் பாதையே மாறிவிட்டது...” - கண்ணீர் தேசமான 'கடவுளின் தேசம்'!!

01:50 PM Jul 31, 2024 IST | Web Editor
“ஒரு ஊரையே காணவில்லை   ஆற்றின் பாதையே மாறிவிட்டது   ”   கண்ணீர் தேசமான  கடவுளின் தேசம்
Advertisement

வயநாடு நிலச்சரிவில் சிக்கி, ஒரு ஊரே காணாமல் போயிருப்பதாகவும் ஆற்றின் பாதையே மாறியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Advertisement

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இத்துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மிக மோசமாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கையில், சில கிலோ மீட்டர் வரை மக்கள் வாழ்ந்த தடயமே இல்லாமல் ஒரு ஊரையே காணவில்லை என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மீட்புப் பணிகளின்போது, கழுகுப் பார்வையில்தான், எறுவழிஞ்சி ஆற்றின் பாதையே மாறி, ஒரு கிராமத்துக்கு நடுவில் சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. ஆனால், ஒரு சில நாள்களுக்கு முன்பு அங்கு ஒரு கிராமம் இருந்தது என்பதற்கான எந்த மிச்சமும் தற்போது இல்லை.

வயநாட்டில் மெப்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரே நாள் இரவில் ஒட்டுமொத்த கிராமமும் தலைகீழாகிவிட்டது. வீடுகளுக்குக் கீழ் இருந்த மண், வீடுகளை புரட்டிப்போட்டுவிட்டு மேலே வந்துவிட்டது. முண்டக்கையிலிருந்து நிலச்சரிவு தொடங்கி, சேரும், மரக் கிளைகளும், நடுவழியில் நின்றிருந்த வீடுகளின் இடிபாடுகளையும் கொண்டுவந்து சூரல்மலாவில் சேர்த்துவிட்டது.

எறுவழஞ்சி ஆற்றங்கரையோரம் இருந்த கிராமத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் விடுதிகள், இங்கிருந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் பாதி, மற்றும் அங்கிருந்த 24 குழந்தைகள் காணாமல் போனதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement