"ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒருவர் கூட தமிழ் பேசுபவர்கள் இல்லை" - சபாநாயகர் அப்பாவு!
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கடந்த நான்கு ஆண்டுகளில் 17 லட்சத்து 95 ஆயிரம் சிறு தொழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 3000 புதிய பேருந்துகள் புதிதாக வாங்கப்படுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு 16 லட்சம் கோடியை தள்ளுபடி செய்யும் பாரத பிரதமர் மக்கள் பயன்படுத்தப்படும் பேருந்து பயணத்தில் டோல்கேட்காண நிலுவைத் தொகையை ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.
தமிழ்நாட்டில் இருக்கும் ரயில்வே கேட்டுகளில் பணியாற்றுபவர்களில் ஒருவர் கூட தமிழ் பேசுபவர்கள் இல்லை. தமிழில் தேர்வு நடத்தி விட்டு தமிழே தெரியாதவர்கள் 90% மதிப்பெண் பெற்றதாக கூறி வேலைக்கு பணியமர்த்துகிறார்கள். இதேபோல் பல்லாயிரம் பேர் பணியமர்த்தப் பட்டுள்ளார்கள். நீதிமன்றம் கேள்வி கேட்டால் பணிக்காக எடுத்து விட்டு தகவல்களை அழித்துவிட்டதாக கூறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.