For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"#LubberPandhu படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக தெரியவில்லை" - கிரிக்கெட் வீரர் #Ashwin பாராட்டு!

04:08 PM Sep 24, 2024 IST | Web Editor
  lubberpandhu படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக தெரியவில்லை    கிரிக்கெட் வீரர்  ashwin பாராட்டு
Advertisement

லப்பர் பந்து திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக தெரியவில்லை என அப்படத்தை பாராட்டி கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

Advertisement

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

அட்டக்கத்தி தினேஷ் இப்படத்தில் கெத்து எனும் கதாபாத்திரத்திலும் ஹரிஷ் கல்யாண் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து,’லப்பர் பந்து’ திரைப்படம் செப்டம்பர் 20ம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் :அமெரிக்க பயணம் – கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்பை சந்திக்காத #PMModi | ஏன் தெரியுமா?

இப்படத்தை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களான பா.ரஞ்சித், பார்த்திபன் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தை சார்ந்த ரவிச்சந்திர அஸ்வின் இப்படத்தை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது..

“ பொதுவாக திரைப்படம் எடுப்பது என்பது ஒரு சீரியசான விஷயம். அதில் நிறைய கடின உழைப்பும், கிரியேட்டிவிட்டியும் இருக்கிறது. எந்த ஒரு படமாக இருந்தாலும் அதில் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மிக குறைந்த நெகட்டிவ் விஷயங்ளை மட்டுமே நான் பேசுவேன். ஆனால், இன்று பல வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு திரைப்படத்தை ரசித்தேன் என்பதையும், சமீபத்திய ஸ்போர்ட்ஸ் படங்களில் பின்பற்றப்படும் கிளிஷேக்களை தாண்டி ஒரு திரைப்படத்தை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும் என்பதற்கான பாடம் இது என்பதையும் என்னால் சொல்லாமல் தவிர்க்க முடியவில்லை.

பொதுவாக கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் தமிழ்ப் படங்களில் அதன் கதைக்கருவை விட்டுவிட்டு அவர்கள் சொல்ல நினைக்கும் விஷயங்களைதான் சொல்வார்கள். 'லப்பர் பந்து' படத்தில் அப்படி ஏதும் இல்லாததால் இது எனக்கு ஸ்பெஷலாக தோன்றியது. மிகவும் நம்பகத்தன்மையுடன், உண்மைக்கு நெருக்கமான இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக தெரியவில்லை. இயக்குநரும் ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக ஹரிஷ் கல்யாண், தினேஷ், சஞ்சனா, ஸ்வாசிகா, காளி வெங்கட் மற்றும் பாலா ஆகியோர் மிகச்சிறப்பான ஒரு படத்தை தந்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement