மூக்குத்தி.. இரட்டை ஜடை.. இதுவரை பார்த்திராத கெட்டப்பில் நானி - The Paradise படத்தி க்ளிம்ப்ஸ் வெளியானது!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் நானியின் நடிப்பிற்கு தெலுங்கை கடந்து தென்னிந்தியாவிலும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. நானியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘சரிபோதா சனிவாரம்’. இப்படத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் நானியைவிட எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரம் அதிக அளவில் பேசப்பட்டது.
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கோர்ட், ஹிட் 3 ஆகிய படங்களில் நானி ஒப்பந்தமானார். தொடர்ந்து ஹிட் 3 படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வந்த நிலையில் நானியின் 33வது படத்தின் பூஜை கடந்த வருடம் அக்டோபர் மாதம் அறிவிக்கபட்டது.
இந்தப் படத்தை தசரா படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக நானிஒடேலா-2 என பெயரிடப்பட்ட நிலையில் பின்னர் தி பாரடைஸ் என பெயர் வைத்தனர். தி பாரடைஸ் படத்திற்கு தமிழ்நாட்டின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தி பாரடைஸ் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இந்த வீடியோவில் இதுவரை கண்டிராத வித்தியாசமான தோற்றத்தில் நானி தோன்றியிருக்கிறார். மூக்குத்தி, இரட்டை பின்னிய ஜடை என ஒரு கூட்டத்தின் தலைவனாக கிளிம்ப்ஸ் வீடியோவில் நானியை காட்சிப்படுத்தியுள்ளனர். க்ளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ”எங்களது ஸ்மார்ட்டான நானி எங்கே?” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.