“வடசென்னை தொகுதி கண்டு கொள்ளப்படாத ஒரு பகுதியாகவே இருக்கிறது” - பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் பேச்சு!
“வடசென்னை தொகுதி கண்டு கொள்ளப்படாத ஒரு மக்களவைத் தொகுதியாகவே இதுவரை இருக்கிறது” என வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் திருவொற்றியூர் பகுதியில் வாக்கு
சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி மக்கள் பாஜக வேட்பாளர் பால் கனகராஜை
ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர். பிரச்சாரத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிரதமர் மோடி பல திட்டங்களை தொலைநோக்கு பார்வையோடு நிறைவேற்றி, அதை
மக்களிடத்திலே கொண்டு சேர்த்திருக்கிறார். அவரின் ஆட்சியை பற்றி பெருமையாக
பேச வேண்டும் என்று சொன்னால் ஊழல் என்று ஒன்று இல்லவே இல்லை. இந்த பத்தாண்டு கால ஆட்சியில் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் வைக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு எதிர்கட்சிகள் ஆளாக்கபட்டிருகிறார்கள்.
இருந்தாலும் சரி, சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி எந்த விதமான ஒரு கல்லையும் நகர்த்தி வைத்தது இல்லை. ஒரு நலத்திட்டங்களும் வடசென்னை தொகுதிக்கு வந்து சேரவில்லை என்பது தான் உண்மை” என கூறியுள்ளார்.
பின்னர் பரப்புரையில் பேசிய அவர்,
“பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்றாலும், இந்த தொகுதியில்
நலத்திட்டங்களை செய்துள்ளார்கள். நாங்கள் எந்த ஒரு பொய்யான வாக்குறுதிகளும் கொடுக்கவேண்டியது இல்லை. இங்கு இருக்கும் கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் 17 ஆண்டுகள் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. பாரதிய ஜனதா கட்சி தான் பல நடவடிக்கைகள் மேற்கொண்டதன் மூலம் கும்பாபிஷேகம் கொண்டுவரப்பட்டது.
இந்த கோயில் சரியாக பராமரிக்கப்படவில்லை. ஆட்சி செய்பவர்கள் நடிப்பை பிரதானமாக வைத்துக்கொண்டு ஆட்சி செய்து வருகிறார்கள். எத்தனை பேர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தாலும் வட சென்னை தொகுதி வளர்ச்சி
அடையவே இல்லை” என மக்களிடையே தெரிவித்தார்.