For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மிஸ் அமெரிக்கா" பட்டத்தை திருப்பி அளித்த நோலியா வோய்க்ட்! ஏன் தெரியுமா?

05:13 PM May 07, 2024 IST | Web Editor
 மிஸ் அமெரிக்கா  பட்டத்தை திருப்பி அளித்த நோலியா வோய்க்ட்  ஏன் தெரியுமா
Advertisement

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் நலனைக் கருத்தில் கொண்டு  மிஸ் அமெரிக்கா பட்டத்தை ராஜிநாமா செய்ய உள்ளதாக நோலியா வோய்க்ட் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.

Advertisement

2023 ஆம் ஆண்டு நெவாடாவில் நடைபெற்ற 72-வது மிஸ் யுஎஸ்ஏ போட்டியில்  வெற்றியாளராக 24 வயதான நோலியா வோய்க்ட் முடிசூட்டப்பட்டார்.  இந்நிலையில்,  மிஸ் யுஎஸ்ஏவை வென்ற முதல் வெனிசுலா-அமெரிக்க பெண்மணி ஆவார்.

கடந்த ஆண்டு மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற நோலியா வோய்க்ட்,  தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் நலனைக் கருத்தில் கொண்டு தனது  மிஸ் யுஎஸ்ஏ பட்டத்தை திருப்பித் தருவதாக அறிவித்துள்ளார்.  அழகி பட்டத்தை ராஜிநாமா செய்வது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : #CSK vs RR: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியின் டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு!

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டதாவது :

"இது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்று நான் உணர்கிறேன். அனைவரும் உடல் மற்றும் மன நலனில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.  நமது ஆரோக்கியமே நமது செல்வம்.  மிஸ் யுஎஸ்ஏவாக எனது பயணம் நம்பமுடியாத அளவிற்கு அர்த்தமுள்ளதாக இருந்தது.  தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் நலனைக் கருத்தில் கொண்டு தனது பட்டத்தை ராஜிநாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன்"

இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Advertisement