For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#NobelPrize | பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! 

03:54 PM Oct 14, 2024 IST | Web Editor
 nobelprize   பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு  
Advertisement

நடப்பு ஆண்டிற்கனான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருதுகள் கொடுக்கப்படும். இந்தாண்டு மருத்துத்திற்கான நோபல் பரிசு கடந்த அக். 7-ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சியில் நிறுவனங்களின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.

https://twitter.com/NobelPrize/status/1845763241147785723

பலவீனமான சட்டம் மற்றும் சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகள் பெரியளவில் வளர்ச்சியை அடையாது என்பதை அவர்களின் ஆய்வு நிரூபித்துள்ளது. ஒரு அமைப்பு எப்படி உருவாகின்றன, அவை எப்படி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது, நிலையான வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் ஆகியவை குறித்து இவர்கள் விரிவான ஆய்வுகளை செய்துள்ளனர்.

Tags :
Advertisement