வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..!
ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியால் ஆண்டு தோறும் ’நோபல் பரிசு’ வழங்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் நினைவாக மனித குலத்துக்கு பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அறிவியல் சமூகத்தால் இது உலகின் மிகவும் உயிரிய விருதாக கருதப்படுகிறது. மேலும் இது இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி , பொருளாதாரம் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டிற்கான நோபல் விருதுகள் கடந்த 6 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் படி இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானை சேர்ந்த சுசுமா கிடகவா, இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு ராப்சன், ஜோர்டானை சேர்ந்த உமர் யாகி ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலோக - கரிம கட்டமைப்பை உருவாக்கியதற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.