For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நோபல் பரிசு பெற்ற முஹமது யூனுஸுக்கு 6 மாத சிறை தண்டனை...

11:51 AM Jan 03, 2024 IST | Web Editor
நோபல் பரிசு பெற்ற முஹமது யூனுஸுக்கு 6 மாத சிறை தண்டனை
Advertisement

வங்கதேசத்தில் தொழிலாளர் நல சட்டங்களை மீறியதற்காக நோபல் பரிசு பெற்ற முஹமது யூனுஸுக்கு 6 மாத சிறை  தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

கிராமீன் வங்கியை நிறுவியதற்காகவும்,  மைக்ரோ கிரெடிட் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் கருத்துக்களுக்கு முன்னோடியாகவும் இருந்ததற்காக 2006 இல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் முஹம்மது யூனஸ்.

வங்கதேசத்தின் தொழிலாளர் நல சட்டங்களை பின்பற்றவில்லை என முஹமது யூனஸ்ஸுக்கும் அவரது கிராமீன் நிறுவன தொழிலாளர்கள் மூவருக்கும் 6 மாத சிறை தண்டனை விதித்து அந்தாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த குற்றாசாட்டு மறுக்கப்பட்டு முஹம்மது யூனஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து நால்வருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என யூனஸின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
Advertisement