For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Portblair இல்ல… இனி ஸ்ரீ விஜயபுரம்! #AndamanNicobar தீவுகளின் தலைநகர் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு!

07:19 PM Sep 13, 2024 IST | Web Editor
portblair இல்ல… இனி ஸ்ரீ விஜயபுரம்   andamannicobar தீவுகளின் தலைநகர் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு
Advertisement

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட்பிளேரின் (Portblair) பெயரை "ஸ்ரீ விஜயபுரம்" என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement

யூனியன் பிரதேசங்களின் ஒரு பகுதியான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் உள்ளது. இந்நிலையில் போர்ட் பிளேயரின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“காலனித்துவ முத்திரைகளில் இருந்து தேசத்தை விடுவிக்க வேண்டுமென்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணோட்டத்தின் ஒருபகுதியாக இன்று போர்ட் பிளேயரின் பெயரை ‘ஸ்ரீ விஜய புரம்’ என்று மாற்ற முடிவு செய்துள்ளோம். முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ‘ஸ்ரீ விஜய புரம்’ நமது சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது.

நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது மூலோபாய திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமான தளமாக விளங்குகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர நமது நாட்டின் முதல் தேசியக் கொடியை அங்குதான் ஏற்றினார். பல சுதந்திரப் போராளிகள் சுதந்திர தேசத்திற்காக போராடிய செல்லுலார் சிறையும் இதுவே” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement