“அவ பாத்த செருக்குல யாரும் பொழைக்கல” - ‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தின் ‘ஆத்தி அடி ஆத்தி’ பாடல் வெளியானது!
சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. எச்.ஆர்.பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் விஜயன் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்ட பிறகு, முதல் பாகத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தின் இப்படத்தில் இருந்து முன்பு முதல் பார்வை, டைட்டில் டீசர், டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ’கல்லூரும் காத்து’ என்ற தலைப்பில் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஆத்தி அடி ஆத்தி’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலை .ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார். பாடலில் “ஆத்தி அடி ஆத்தி... அவ பாத்த செருக்குல யாரும் பொழைக்கல” என்ற வரிகளுடன் கல்யாண காட்சிகள் இடம்பெற்றுள்ளன.