Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஹிந்தியை யாரும் படிக்க வேண்டாம் என்று கூறவில்லை.. திணிக்க வேண்டாம் என்றுதான் கூறுகின்றனர்” - விஜய் சேதுபதி!

09:17 PM Jan 07, 2024 IST | Web Editor
Advertisement

“ஹிந்தியை யாரும் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஹிந்தியை திணிக்க
வேண்டாம் என்று தான் கூறுகின்றனர்” என மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Advertisement

இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்திருக்கும் திரைப்படம் மெர்ரி கிறிஸ்துமஸ். இப்படத்தில் ராதிகா சரத்குமார், காயத்ரி சங்கர், சண்முகராஜன் என பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் ரமேஷ் துராணி, ஜெய தௌராணி இணைந்து படத்தினை தயாரித்துள்ளனர். டேனியல் பி. ஜார்ஜ் மற்றும் ப்ரீதம் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப், இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், படத்தின் துணை இயக்குநர்கள் மற்றும் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, “நானும், கத்ரீனா கைஃபூம் சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் அனைவருக்கும் எந்த மாதிரியான படமாக இருக்கும் என்ற கேள்வியை தூண்டும் வகையில் இந்த படம் உள்ளது. படம் பார்த்து முடித்துவிட்டு நீங்கள் சொல்லும் கருத்துக்காக நான் காத்திருக்கிறேன் எனக் கூறினார். மேலும் கத்ரீனா கைஃப் உடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.”

அப்போது செய்தியாளர் ஒருவர் ஹிந்தியை படிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “ ஹிந்தியை யாரும் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஹிந்தியை திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கின்றனர் என விஜய் சேதுபதி கூறினார்.

Tags :
hindiMerry ChristmasNews7Tamilnews7TamilUpdatesPRESS MEETVijay sethupathi
Advertisement
Next Article