அணியில் ஒருவர் கூட 25 ரன்களை தாண்டவில்லை - SRH ரசிகர்கள் சோகம்!
ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் உள்ள வீரர்கள் ஒருவர் கூட 25 ரன்களை எட்டவில்லை.
ஐபிஎல்2024 மார்ச் 22ம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், நடப்பு சாம்பியன்ஸான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெளியேறியது. இது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு வந்தன. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எலிமினேட்டரில் வெளியேற, ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது குவாலிஃபையர் சுற்றில் வெளியேறியது. கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்தன.
இந்நிலையில், இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில், முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பேட் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகள் எடுத்தார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். வைபவ் அரோரா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர். இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3வது முறையாக சாம்பியன் ஆனது.
இந்நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டியில் குறைவான ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை ஹைதராபாத் அணி படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் 125 ரன்கள் மட்டுமே குறைவான ஸ்கோராக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் இறுதிப் போட்டியில் 33 இன்னிங்ஸ்களில் ஒரு அணியிலுள்ள எந்த வீரரும் 25 ரன்களை கூட எட்டவில்லை. பேட் கம்மின்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார்.
மேலும், ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் 6 வெவ்வேறு பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 6 விதமான பவுலர்கள் விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.