For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”இபிஎஸ் போல இஸ்லாமிய மக்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை” - எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக்...!

09:52 PM Jan 07, 2024 IST | Web Editor
”இபிஎஸ் போல இஸ்லாமிய மக்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை”   எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக்
Advertisement

”இபிஎஸ் போல இஸ்லாமிய மக்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை” -என எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். 

Advertisement

மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே எஸ்டிபிஐ கட்சியின் மதசார்பின்மை மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த மாநாட்டின் கொடியினை மாநில தலைவர் நெல்லை முபாரக் ஏற்றி வைத்தார். இந்த மாநாட்டில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் பைசி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து எஸ்டிபிஐ கட்சியினர் பங்கேற்றனர். எஸ்டிபிஐ கட்சியின் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ மாநாட்டில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தமிழ்நாடு முழுதும் இருந்து 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எடப்பாடி கே.பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் நெல்லை முபாரக் பேசியதாவது:

பாஜகவுடன் கூட்டணியிலிருந்து விலகியதால் தமிழக அரசியல் சூழலை எடப்பாடி பழனிச்சாமி மாற்றி காட்டியுள்ளார். நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக விரும்பியது பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலக வேண்டும். நாட்டு மக்களின் விருப்பத்தை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து மதச்சார்பின்மையை நீக்க ஒன்றிய அரசு முயன்று வருகிறது. மதச்சார்பின்மையை நிலைநாட்ட அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணை செய்ய வேண்டும். மதச்சார்பின்மை மாநாட்டால் சிறுபான்மையினர் வாக்குகளை கொத்தாக அள்ளிக் கொள்ளும் எண்ணம் தவிடு பொடி ஆக்கப்பட்டுள்ளது.

திமுகவின் இரண்டரை வருட ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்களுக்காகச் சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்துள்ள நலத்திட்டங்களை நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?... யாரும் செய்யாத வகையில் எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க தீர்மானம் கொண்டு வந்தார்.

எடப்பாடிக்குப் பழனிச்சாமி போல இஸ்லாமிய மக்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. சிறுபான்மை மக்களுக்கு திமுக அதாவது செய்ய வேண்டும் என்றால் இஸ்லாமிய சிறைவாசிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

சமூக நீதியின் அடையாளம் என்பது இஸ்லாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்வது ஆகும். திமுகவில் உயர் பதவிகளில் இஸ்லாமிய மக்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. அதிமுகவின் உயர் பதவிகளில் இஸ்லாமியர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு எதுவும் செய்யாததால் ஒட்டுமொத்த சிறுபான்மை மக்கள் திமுகவைப் புறக்கணித்து விட்டது. மிக மோசமான ஆட்சி காலமாக திமுகவின் ஆட்சியை பார்க்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் எஸ்.டி.பி.ஐ கட்சி கூட்டணியில் உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததை எஸ்.டி.பி.ஐ கட்சி மனதார வரவேற்கிறது. நாடாளுமன்றத்தில் தேர்தலில் அதிமுகவுடன் எஸ்.டி.பி ஐ கட்சி கூட்டணி வைப்பது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சி பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும்.

Advertisement