“முல்லைப் பெரியாற்றில் புதிய அணை தேவையில்லை” - மெட்ரோமேன் ஸ்ரீதரன் கருத்து!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டத் தேவையில்லை என என மெட்ரோ ரயில் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும், பழைய அணையை முறையாக பராமரித்தாலே அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்' என மெட்ரோ ரயில் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதிலிருந்து கேரள மாநிலம் இடுக்கியில் அமைந்துள்ள 125 ஆண்டுகள் பழைமையான முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக கோழிகோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதரன் பேசியதாவது;
புதிய அணையை கட்ட அதிக செலவாகும். குறைந்தபட்சம் 12 முதல் 15 ஆண்டுகள் ஆகும். எனவே, அங்கு புதிய அணையை கட்டுவதைவிட ஏற்கெனவே உள்ள அணையை முறையாக பராமரிப்பதே போதுமானதாக இருக்கும். நான்கு அல்லது 5 சிறு தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் நீரோட்டத்தை திசை மாற்றி விடலாம். அதன் மூலம் அணையின் நீர் மட்டத்தை பாதுகாப்பான அளவில் பராமரிக்கவும் முடியும்” என தெரிவித்துள்ளார்.