For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிமுகம்!

12:19 PM Dec 29, 2023 IST | Web Editor
எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிமுகம்
Advertisement

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு சிறப்பு சலுகைகளை எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்  (எல்ஐசி) தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்கள் தாமதமாகும் தவணைத்தொகைக்கான அபராத தொகையை செலுத்த தேவையில்லை.  மேலும்,  இறப்புரிமங்களை கோருவதற்கான விதிகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, விண்ணப்பம் மற்றும் இறப்புக்கான எளிய ஆதாரம் போதுமானது; போலீஸ் , பிரேத பரிசோதனை அறிக்கை தேவையில்லை.

மேலும் பாலிசிதாரர்கள்  (044) 2861 1642, 2861 1912, 2533 1915, 2533 1914 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் வீடுகளுக்கு வந்து சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement