For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு!

12:25 PM Feb 08, 2024 IST | Web Editor
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு
Advertisement

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.

Advertisement

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 6 ஆம் தேதி பணவியல் கொள்கை கூட்டத்தை தொடங்கியது. இந்தக் கூட்டம் மூன்று நாள் தொடர்ந்து நடைபெற்றது.  இன்று (பிப். 8) முக்கிய முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்டார்.  ரிசவ்ர் வங்கி கூட்டம் என்றாலே மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது ரெப்போ வட்டி விகித குறைப்பு பற்றிய அறிவிப்பைத்தான்.  சென்ற ஆண்டு 6.50 ஆக ரெப்போ வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி அதை தொடர்ந்து அதே நிலையில் வைத்து வருகிறது.  அதனைத்தொடர்ந்து இம்முறை கண்டிப்பாக வட்டி விகித குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படிந்தது.

இதையும் படியுங்கள் ; 32 மாதங்களில் ஈர்த்த முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை- தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்!

இந்நிலையில்,  இந்திய ரிசர்வ் வங்கி அதன் நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில்  முக்கிய கொள்கை விகிதத்தை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.  இதில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டாமல் 6.5 சதவீதமாக உள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.  இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரெப்போ விகிதம் அப்போதிருந்த 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும், அந்த நேரத்தில் உலகளாவிய வளர்ச்சியால் உந்தப்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெஞ்ச்மார்க் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.

இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியதாவது,

"உணவு விலையில் உள்ள நிச்சயமற்ற தன்மை,  பணவீக்கத்தை தொடர்ந்து பாதிக்கிறது. உள்நாட்டு நடவடிக்கைகள் வலுவாக உள்ளது.  பணக் கொள்கை தொடர்ந்து பணவீக்கத்தை குறைக்க வேண்டும். நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதம் என்ற இலக்கில்கட்டுப்படுத்துவதில் எம்பிசி (MPC) உறுதியாக உள்ளதாக கூறிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவகிறது.

ரெப்போ விகிதம் என்றால் என்ன?

வங்கிகளுக்கு மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட் (Repo Rate) எனப்படும்.  ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி அதிகமாக இருக்கும். இதன் காரணமாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடன்களின் விகிதமும் அதிகரிக்கும்.  இதன் விளைவு கார் கடன்,  வீட்டுக் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதங்களில் தெரியும்.  ரெப்போ விகிதத்தில் செய்யப்படும் மாற்றங்கள் கடன் வாங்கியுள்ள வங்கி வாடிக்கையாளர்களின் இஎம்ஐ மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

Tags :
Advertisement