Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தங்கலான் #OTT வெளியீட்டுக்கு தடை இல்லை” - உயர்நீதிமன்றம் உத்தரவு!

01:44 PM Oct 21, 2024 IST | Web Editor
Advertisement

தங்கலான் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படம் தமிழ் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.

இதனையடுத்து ஓடிடி ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கு தடை விதிக்க வேண்டும் என திருவள்ளூரைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால் ஓடிடி தளத்தில் தங்கலான் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடை இல்லை என தெரிவித்துள்ளது. தணிக்கை சான்று அளிக்கப்பட்டு, திரைப்படம் திரையரங்கில் வெளியான பின், ஓடிடியில் வெளியிட தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags :
Actor vikramMadras High CourtPa Ranjiththangalaan
Advertisement
Next Article