Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதுச்சேரியில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை!

03:23 PM Nov 15, 2023 IST | Web Editor
Advertisement

புதுச்சேரியில் இரவு முதல் மழை ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் மதியம் முதல் மழை தொடங்கியுள்ளது. மேலும் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Advertisement

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவ.19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  இன்று 9 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்த புயல் சின்னம் இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை ஒடிஸா கடற்கரைக்கு நகரும் எனவும், இது புயலாக மாறுமா என்பது நாளை தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது.  கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 36 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாகவும்,  அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்திலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் புதுச்சேரி நகரப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் 2 மணி முதல் பரவலாக மழை பெய்யத்தொடங்கியுள்ளது.  மேலும் அவ்வப்பொழுது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.  மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.

Tags :
Chennai RMCcuddloreCyclonekaraikalMetrological DepartmentNews7Tamilnews7TamilUpdatesPuducherryRainrain alertTn RainsWeather Update
Advertisement
Next Article