For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#NLUDelhi | கல்லூரி விடுதியில் உயிரை மாய்த்துக் கொண்ட சென்னை மாணவி | நடந்தது என்ன? 

12:04 PM Sep 06, 2024 IST | Web Editor
 nludelhi   கல்லூரி விடுதியில் உயிரை மாய்த்துக் கொண்ட சென்னை மாணவி   நடந்தது என்ன  
Advertisement

டெல்லி கல்லூரி விடுதியில் சென்னை மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார், சங்கீதா தம்பதியின் மகள் அமிர்தவர்ஷினி. இவர் டெல்லி துவாரகாவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ..எல்.எல்.பி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த அமிர்தவர்ஷினி இரு தினங்களுக்கு முன்பு விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவலறிந்த கல்லூரி நிர்வாகம் டெல்லி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து மாணவியின் உடலை கைப்பற்றி தீனதாயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி துவாரகா போலிசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மாணவியின் மரண செய்தி தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தெரிவித்தவுடன், அமிர்தவர்ஷினியின் தந்தை செந்தில்குமார் மற்றும் தாயார் சங்கீதா ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லிக்கு விரைந்து வந்தனர். இந்நிலையில், மரணமடைந்த மாணவியின் உடல் டெல்லி ஹரி நகரில் உள்ள தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அமிர்தவர்ஷினியின் தற்கொலைக்கு பல்கலைக்கழகத்தில் எழுந்த பிரச்னைகள் காரணமா? அல்லது படிப்பில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் தற்தொலை செய்த அமிர்தவர்ஷினி, கடந்த ஆண்டு சக மாணவிககு நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியவர் என்று உடன் படிக்கும் மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கூடுதல் டிசிபி நிஷாந்த் குப்தா கூறுகையில், “மாணவி, கல்வி அழுத்தத்துடன் போராடி வந்ததாகவும், இதற்கு முன்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது அறை நண்பர்களிடம் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.

Tags :
Advertisement