"நிதிஷ் குமார் ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி" - பாஜக மூத்த தலைவர் விமர்சனம்.!
" நிதிஷ் குமார் ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி " என பாஜக மூத்த தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.
பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பீகார் முதலமைச்சர் பதவியை இன்று நான் ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன். இந்தியா கூட்டணியில் விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. நான் காயப்படுத்தப்பட்டேன். எனவே, இந்தியா கூட்டணியை விட்டு நான் வெளியேறிவிட்டேன்” என தெரிவித்தார்.
பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை நிதீஷ் குமார் ஆளுநரிடம் வழங்கினார். தொடர்ந்து பீகாரில் ஆட்சி அமைப்பதற்கும் உரிமை கோரியுள்ளார். 243 உறுப்பினா்களைக் கொண்ட பீகாா் சட்டப் பேரவையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுக்கு உள்ள 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை பீகார் ஆளுநரிடம் நிதீஷ் குமார் வழங்கினார். இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக நிதீஷ் குமார் பதவியேற்றார்.
வழக்கமாக எந்தவொரு முதல்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பதவியேற்பார்கள்.
ஆனால் நிதீஷ் குமார் ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை முதல்வராகப் பதவியேற்கிறார். அதுவும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அரசியல் கூட்டணியில் இருந்து பதவியேற்கிறார். என்னைப் பொருத்தவரை நிதீஷ் குமார் ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி. அவரின் இத்தகைய செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்." என்று தெரிவித்தார்.